என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
Byமாலை மலர்9 Aug 2020 11:58 AM GMT (Updated: 9 Aug 2020 11:58 AM GMT)
மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
மூணாறு:
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 5 பேரின் உடல் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 36 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி கயத்தாறு பகுதியை சேர்ந்த 40 குடும்பங்கள் தங்கியிருந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி கனமழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இணை மந்திரி முரளீதரன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Next Story
×