search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லட்சுமிகாந்த் பாஜ்பாய்
    X
    லட்சுமிகாந்த் பாஜ்பாய்

    மத்திய பிரதேசத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம்

    மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் (85) கடந்த மாதம் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

    லால்ஜி டாண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து உத்தரப் பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல் மத்திய பிரதேச கவர்னராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார். லால்ஜி மறைந்ததையடுத்து, மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பு ஆனந்திபென் பட்டேலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் உத்தரப் பிரதேசம் மாநில பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×