search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விலங்குகள் உயிரிழப்பு
    X
    விலங்குகள் உயிரிழப்பு

    அசாம் பூங்காவில் வெள்ளத்துக்கு 129 விலங்குகள் உயிரிழப்பு

    அசாமில் பெய்த கனமழையால் காசிரங்கா பூங்கா, புலிகள் சரணாலயத்தில் 129 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கவுகாத்தி:

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது.  சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.  எனினும், கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இது தவிர்த்து,

    நாட்டின் வடபகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனால், டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து நிவாரண முகாம்களை தஞ்சமடைந்து உள்ளனர்.

    இதேபோன்று, பீகார், உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வருகிற 26ந்தேதி முதல் 28ந்தேதி வரையிலும், பஞ்சாப் மற்றும்  அரியானாவில் வருகிற 27ந்தேதி முதல் 29ந்தேதி வரையிலும் பரவலான கனமழை மற்றும் தீவிர கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த மழைப்பொழிவானது மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அதிகளவில் காணப்படும்.

    இந்நிலையில் அசாமில் பெய்த கனமழை காரணமாக காசிரங்கா பூங்கா, புலிகள் சரணாலயத்தில் 129 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  14 காண்டாமிருகம், 95 மான்கள், 5 காட்டெருமைகள், 8 காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×