search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரயாக்ராஜில் உருவாக்கப்பட்ட மணல் சிற்பம்
    X
    பிரயாக்ராஜில் உருவாக்கப்பட்ட மணல் சிற்பம்

    கார்கில் வெற்றி தினம் -மணல் சிற்பம் உருவாக்கி வீரர்களுக்கு மரியாதை செலுத்திய கலைஞர்கள்

    கார்கில் வெற்றி தினத்தையொட்டி, வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரயாக்ராஜில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
    பிரயாக்ராஜ்:

    கார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் இன்று 21வது கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

    இதையொட்டி வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றி மரியாதை செலுத்தும் வகையில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மணல் சிற்பக் கலைஞர்கள் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    போரில் இன்னுயிரை இழந்த வீரர்களின் தியாகத்தை பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி உள்ளனர்.
    Next Story
    ×