search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய மக்கள் தொகை
    X
    இந்திய மக்கள் தொகை

    இந்தியாவின் மக்கள் தொகை 2100-ல் 109 கோடியாக குறையும்: ஆராய்ச்சியில் தகவல்

    இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும், அதே சமயத்தில் 2100-ல் 32 சதவீதம் குறைந்து 100 கோடியே 9 லட்சமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 138 கோடியாக உள்ளது. சீனா 143 கோடி மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது.

    அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர். 2017 உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மக்கள்தொகை மற்றும் அவற்றின் இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்களை திட்டமிட புதிய மாதிரிகள் ஆகியவற்றை கொண்டு இந்த புள்ளிவிவரங்களை ஆராய்ச்சி செய்துள்ளனர்.

    அதனடிப்படையில் மக்கள் தொகை அடிப்படையில் 2100-க்குள் சீனா, இந்தியா, நைஜீரியா மற்றும் அமெரிக்க நாடுகளுடன் பல நாடுகள் போட்டியிடுவதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும். அதேவேளையில் 2100-ல் 32 சதவீதம் குறைந்து 109 கோடியாகும். 2017-ல் இந்தியாவில் வேலைக்கு தகுதியான வயதுடைய நபர்கள் 76.2 கோடியாக இருந்த நிலையில், 2100-ல் அது 57.8 கோடியாக குறையும். சீனாவில் 2017-ல் 95 கோடியாக இருந்த நிலையில், 2100-ல் 35.7 கோடியாக குறையும் எனத் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×