search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை தாங்கிய வெங்கரேஷ்வரளூ
    X
    மனைவியை தாங்கிய வெங்கரேஷ்வரளூ

    கொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்பிராணி - தற்கொலை செய்து கொண்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

    தெலுங்கானா மாநிலத்தில் கணவர் தன்னை கொடூரமாக தாக்கியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த தாக்குதல் வீடியோவை பெண்ணின் பெற்றோர் வெளியிட்டனர். அதில் செல்லப்பிராணி தாக்குதலை தடுக்க முயற்சி செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ரல்லாகுவா பகுதியை சேர்ந்த லாவண்யா லஹாரி. இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவருக்கு தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்து வரும் வெங்கடேஷ்வரளூ என்பவருக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.  

    இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்ட லாவண்யா தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக பதிவிட்டிருந்தார்.  

    வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தனது மகளை அவரது கணவர் தாக்கிய சிசிடிவி வீடியோவை லாவண்யாவின் பெற்றோர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் வெங்கடேஷ்வரளூ அவரது மனைவி லாவண்யாவை கடுமையாக தாக்குகிறார். அப்போது அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணி நாய் அந்த தாக்குதலை தடுக்க முயற்சி செய்கிறது.

    லாவண்யா மற்றும் கணவர் வெங்கரேஷ்வரளூ

    கணவன் மிகவும் கொடூரமாக தாக்கியதால் தனது வயிற்றிலை கையை வைத்தபடி அழுதுகொண்டே லாவண்யா செல்வது போன்ற அந்த சிசிடிடி கேமராவில் வீடியோ பதிவாகியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக லாவண்யாவின் கணவர் வெங்கடேஷ்வரளூவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட லாவண்யா தான் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். 

    அதில் தனது கணவர் வெங்கடேஷ்வரளூ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் தன்னை உடல் மற்றும் மன ரீதியில் கொடுமைபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார் என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.  

    Next Story
    ×