search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கும் பேரிடர் மீட்புக் குழுவினர்
    X
    பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கும் பேரிடர் மீட்புக் குழுவினர்

    நெருங்கும் அம்பன் புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்

    வங்கக் கடலில் உருவான அம்பன் வலுப்பெற்று புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருதால், 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. ‘அம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் இது மிகவும் மிக தீவிரமான புயலாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

    இந்த புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 21ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் இந்த புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    புயல் மையம் கொண்டுள்ள பகுதி

    புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நிலையை சமாளிக்க பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலோர கிராமங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். 

    இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து, நாளை மதியம் அல்லது மாலையில் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×