search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    நாகலாந்தில் கொரோனாவால் பெட்ரோல் விலை ரூ.6 உயர்த்தப்பட்டது

    நாகலாந்து மாநிலத்தில் விற்கப்படும் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாயும், டீசலுக்கு 5 ரூபாயும் கூடுதல் செஸ்வரி விதிக்கப்பட்டுள்ளது.
    கோகிமா:

    கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது வருகிற 3-ந்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலுமே கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரி வசூல் மற்றும் மற்ற வகையில் வரும் வருவாய்கள் என அனைத்தும் மிகவும் குறைந்து விட்டது.

    இதனால் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட கூட பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.

    இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க நாகலாந்து அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி மாநிலத்தில் விற்கப்படும் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாயும், டீசலுக்கு 5 ரூபாயும் கூடுதல் செஸ்வரி விதிக்கப்பட்டுள்ளது.

    நாகலாந்து சட்டத்தின் அடிப்படையில் இந்த வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இதேபோல பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 உயர்த்தி இருந்தார்கள். அதை இப்போது நாகலாந்தும் பின்பற்றி உள்ளது.

    மேகாலயா மாநிலத்தில் அனைத்து வகை விற்பனை வரியிலும் 2 சதவீதம் கூடுதல் வரியை மாநில அரசு விதித்துள்ளது.
    Next Story
    ×