என் மலர்

  செய்திகள்

  மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்
  X
  மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்

  2020-2021 கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி. கட்டணம் உயர்த்தப்படாது - மத்திய அரசு அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 2020-21-ம் கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி. கட்டணம் உயர்த்தப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி அறிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  வருகிற 2020-21-ம் கல்வி ஆண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.) எந்த படிப்புக்கும் கல்வி கட்டணத்தை உயர்த்தாது. ஐ.ஐ.டி. கவுன்சில் நிலைக்குழு தலைவருடனும், ஐ.ஐ.டி. இயக்குனர்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  இதுபோல், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும் (ஐ.ஐ.ஐ.டி.) எந்த படிப்புக்கும் கல்வி கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×