search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றிய வாலிபருக்கு கோர்ட் நூதன தண்டனை

    கொல்கத்தாவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றிய வாலிபருக்கு கோர்ட்டு நூதன தண்டனை வழங்கி உள்ளது.
    கொல்கத்தா:

    கொல்கத்தாவை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், கடந்த 11-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கொல்கத்தாவை வலம் வந்தார். சாரு மார்க்கெட் பகுதியில், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி, வீட்டில் இருந்து 7 கி.மீ. தூரம் வெளியே வந்ததற்கு அவரால் திருப்திகரமான விளக்கம் அளிக்க முடியவில்லை. அவரிடம் வாகனத்துக்கான ஆவணங்களும் இல்லை. அத்துடன், தடுத்து நிறுத்திய போலீசாரை சரமாரியாக திட்டினார். தப்பி ஓட முயன்றார்.அதனால், அரசு உத்தரவுக்கு கீழ்ப்படியாதது, பொது ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.

    அலிப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அந்த வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய மாஜிஸ்திரேட்டு, கொரோனாவுக்கு எதிராக தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யுமாறு நூதன தண்டனை விதித்தார்.

    அதன்படி, கொல்கத்தாவில், போலீசார் குறிப்பிடும் பகுதியில், அந்த வாலிபர் தினமும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரை பிரசாரம் செய்கிறார்அதாவது, கோர்ட்டு நிர்ணயித்த நேரத்துக்கு மேல் அவர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
    Next Story
    ×