என் மலர்
செய்திகள்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாளை உ.பி. பயணம் - நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை உத்தர பிரதேசம் செல்கிறார்.
புதுடெல்லி:
உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி இடையே 296 கிலோ மீட்டர் தொலைவிற்கு பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலைக்கான திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெருகிறது. மேலும், சித்ரகூடம் மற்றும் பிரயாக்ராஜ் நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்கிறது.
இந்த விழாவில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பலனடைவார்கள்.
இந்நிலையில், பல்வேறு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்த்ர மோடி நாளை உத்தர பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப்ட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story