search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் அதிகாரிகள்
    X
    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் அதிகாரிகள்

    டெல்லியை கைப்பற்றுவது யார்? பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று மதியம் தெரிந்துவிடும்.
    புதுடெல்லி:

    டெல்லி மாநிலத்தில் 70 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக  தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகள்

    வாக்கு எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 33 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டதாலும் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பிற்பகலுக்குள் வெளியாகும் என தேர்தல் கமி‌‌ஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×