search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருண் ஜெட்லி
    X
    அருண் ஜெட்லி

    அருண் ஜெட்லி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட பீகார் மந்திரி சபை முடிவு

    முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட பீகார் மாநில மந்திரி சபை முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    பாட்னா:

    முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு பா.ஜ.க.வுக்கு பேரிழப்பாய் அமைந்தது.

    இதற்கிடையே, முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, டிசம்பர் 28ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி சிலையை அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைத்தார்.

    இந்நிலையில், பீகார் மாநில மந்திரி சபை கூட்டம் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பீகாரில் அருண் ஜெட்லியின் பிறந்த நாளான டிசம்பர் 28-ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட அம்மாநில மந்திரி சபை முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×