search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே
    X
    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே

    ‘பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும்’ - முதல்-மந்திரிக்கு, அன்னா ஹசாரே கடிதம்

    பாதுகாப்பை திரும்பப்பெற வேண்டும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    புனே:

    மராட்டிய அரசு பிரபலங்களுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு தரத்தை சமீபத்தில் மாற்றி அமைத்தது. அதன்படி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அதேநேரம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கான பாதுகாப்பு ‘ஒய் பிளஸ்’ பிரிவில் இருந்து ‘இசட்’ பிரிவாக அதிகரிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது பாதுகாப்பை ரத்து செய்யுமாறு நான் மாநில அரசிடம் ஏற்கனவே கோரியிருந்தேன். ஆனால் எனது கோரிக்கைக்கு அரசு பதிலளிக்கவில்லை. அரசு சிலரின் பாதுகாப்பை ரத்து செய்கிறது என்ற தகவல் எனக்கு கிடைத்தது. அதுபோல எனது பாதுகாப்பையும் திரும்ப பெறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    கடந்த காலங்களில் என்னை பலர் அச்சுறுத்தி உள்ளனர். அவற்றை நான் புறக்கணித்துள்ளேன். எனது பாதுகாப்புக்கு அரசு செலவழிப்பதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×