search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படை வீரர்கள்
    X
    பாதுகாப்பு படை வீரர்கள்

    பாதுகாப்பு படை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு படை சட்டத்திருத்த மசோதா கடும் விவாதத்துக்கு பின்னர் மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது.
    புதுடெல்லி:

    உள்துறை மந்திரி அமித் ஷா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) சட்டத்திருத்த மசோதா-2019 விவாதத்துக்கு பின்னர் கடந்த மாதம் 27-ம் தேதி மக்களவையில் நிறைவேறியது.

    இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது பிரியங்கா காந்தியின் வீட்டில் எவ்வித சோதனையும் இல்லாமல் சமீபத்தில் ஒரு கார் நுழைந்ததை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி.க்கள் அவருக்கு மீண்டும் சிறப்பு படை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

    அமித் ஷா பதிலளித்த காட்சி

    இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, இவ்விவகாரம் தொடர்பாக துணை ராணுவப் படையை சேர்ந்த 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    இதற்கு பின்னரும் பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையில் வாக்குவாதமும் விவாதமும் நீண்டுக்கொண்டே போனது. இறுதியாக இன்று மாலை சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) சட்டத்திருத்த மசோதா-2019 மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

    ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பின்னர் இந்த மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×