search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தபய ராஜபக்சே
    X
    கோத்தபய ராஜபக்சே

    இலங்கை அதிபர் நாளை இந்தியா வருகை - டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    சமீபத்தில் இலங்கை சென்றிருந்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கோத்தபய ராஜபக்சேவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு வருமாறு மோடி விடுத்திருந்த அழைப்பை நினைவுப்படுத்தினார்.

    கோத்தபய ராஜபக்சேவுடன் ஜெய்சங்கர்

    இந்நிலையில், இலங்கை அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக  கோத்தபய ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார்.

    மூன்றுநாள் பயணமாக இங்கு வரும் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

    இந்த ஆலோசனையின்போது சில புதிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு ம.தி.மு.க. உள்ளிட்ட சில தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
    Next Story
    ×