என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் - கைக்குழந்தையுடன் சரண்
Byமாலை மலர்8 Nov 2019 9:29 AM GMT (Updated: 8 Nov 2019 9:29 AM GMT)
ஒடிசா மாநிலத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் தனது கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
புவனேஸ்வர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும் நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
பொதுமக்களின் உயிரை பறித்த சம்பவங்களில் தொடர்புடைய சில நக்சலைட்டுகளை தேடப்படும் குற்றவாளிகளாக ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அவரவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு 5 லட்சம் ரூபாய் வரை சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.
அவ்வகையில், ஒடிசா மாநிலத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் ராயகுடா காவல் நிலையத்தில் தனது கைக்குழந்தையுடன் நேற்று சரணடைந்தார்.
திருந்தி வாழ நினைக்கும் நக்சலைட்டுகளின் புணர்வாழ்வு தொடர்பாக ஒடிசா மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ள பலன்கள் அந்த பெண்ணின் குழந்தைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×