search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரமுல்லா பகுதியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் சுற்றுலாபயணிகள்
    X
    பாரமுல்லா பகுதியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் சுற்றுலாபயணிகள்

    காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவிவருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் இந்த பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல்வேறு சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது மட்டுமல்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பனிப்பொழிவால் குல்மார்க் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாரமுல்லா பகுதியில் நிலவும் பனிப்பொழிவு

    இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள ரெயில் சேவைகள் வரும் 11-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் அங்கு நிலவிவரும் பனிப்பொழிவை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காஷ்மீருக்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×