என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி
Byமாலை மலர்23 Oct 2019 10:23 AM GMT (Updated: 23 Oct 2019 10:23 AM GMT)
காஷ்மீரில் உள்ள நவ்ஷேரா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.
ஜம்மு:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2050-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட நவ்ஷேரா எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் நேற்று துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ‘நயிப் சுபேதார்’ வால்டே சுனில் ராவ்சாகேப் என்ற வீரர் படுகாயமடந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட நவ்ஷேரா எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் நேற்று துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ‘நயிப் சுபேதார்’ வால்டே சுனில் ராவ்சாகேப் என்ற வீரர் படுகாயமடந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.
Next Story
×