search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் விகாஷ் அகாதி கட்சி எம்.எல்.ஏ. கிஷித்ஜி தாகூர்
    X
    பகுஜன் விகாஷ் அகாதி கட்சி எம்.எல்.ஏ. கிஷித்ஜி தாகூர்

    மகாராஷ்டிரா: சின்னத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததற்காக வம்பில் சிக்கிய எம்.எல்.ஏ

    தேர்தல் பிரச்சாரத்தின்போது விசில் ஊதி பொது அமைதியை சீர்குலைத்ததாக மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.வுக்கு தேர்தல் கமிஷன் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமேன காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தன.

    இதற்கிடையில், அம்மாநிலத்தில் பகுஜன் விகாஷ் அகாதி என்ற கட்சிக்கு தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    அங்குள்ள நலசோப்பரா தொகுதியின் தற்போதையை எம்.எல்.ஏ. கிஷித்ஜி தாகூர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பகுஜன் விகாஷ் அகாதி கட்சியின் வேட்பாளருமான கிஷித்ஜி தாகூர் நலசோப்பரா தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரது கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் பல பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது அவர்களது ஆதரவாளர்கள் தங்கள் கட்சி சின்னமான விசிலை சத்தமாக ஊதி வந்தனர்.  

    பகுஜன் விகாஷ் அகாதி ஆதரவாளர்கள் விசிலை மிக சத்தமாக ஊதுவதாகவும் இந்த சத்தத்தால் தெருக்களில் உள்ள  வயதானவர்கள் மிகவும் சிரமப்படுவதாக குற்றம்சாட்டி  வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தேர்தல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். 

     பகுஜன் விகாஷ் அகாதி கட்சி சின்னம் மற்றும் எம்.எல்.ஏ. கிஷித்ஜி தாகூர்

    இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் கண்காணிப்பாளர்  பகுஜன் விகாஷ் அகாதி கட்சி எம்.எல்.ஏ. கிஷித்ஜி தாகூருக்கு ஒரு கடிதம்அனுப்பியுள்ளார்.

    தேர்தலில் போட்டியிடும் உங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒரு சின்னமாகவே விசில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    உள்ளூர்வாசிகள், வயதானவர்கள் பாதிக்கப்படும் அளவிற்கு பிரசார கருவியாக விசிலை பயன்படுத்த அனுமதி இல்லை. ஆகையால் வாக்கு சேகரிப்பின்போது விசில் ஊதுதல் தேர்தல் நடத்தை விதி மீறலாகவே கருதப்படும். 

    மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தெடர்ந்தால் அந்த சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×