
மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் உள்ள 288 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று மாலை வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் போகெர் தொகுதியிலும், நிதின் ரவுட் நாக்பூர் வடக்கு தொகுதியிலும், பரினிட்டி ஷின்டே சோலாப்பூர் மத்திய தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.