search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகில் சந்திரயான்2, 370-பது சட்டப்பிரிவு
    X
    முதுகில் சந்திரயான்2, 370-பது சட்டப்பிரிவு

    சந்திரயான்2 படத்தை முதுகில் வரைந்து குஜராத் பெண்கள் நவராத்திரி கொண்டாட்டம்

    நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்த இளம்பெண்கள் தங்களது முதுகில் சந்திரயான்2 உள்ளிட்ட படங்களை வரைந்து கலக்கி வருகிறனர்.
    அகமதாபாத்:

    நவராத்திரி பண்டிகை இந்த ஆண்டு 29-09-2019 (இன்று) தொடங்கி 7-10-2019 வரை நடைபெறவுள்ளது.  முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு பொம்மைகளின் கண்காட்சிகள் வைத்து வழிபாடு செய்யப்படும்.

    நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை நடத்தி வருகிறோம். சரஸ்வதி பூஜைய‌ன்று ‌அலுவலக‌ங்க‌ளிலு‌ம், வீடுக‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழக்கமாகும்.  

    போக்குவரத்து விதிகளை விளக்கும் படம்

    ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும்.

    இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள், திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபடுவதால், நம்முடைய வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்த இளம்பெண்கள் சந்திரயான்2, காஷ்மீரில் 370-வது சட்டப்பிர்வு நீக்கம், சாலை விதிகளை கடைபிடித்தல் உள்ளிட்ட படங்களை தங்களது முதுகில்  வரைந்து செய்திகளில் இடம்பிடித்துள்ளனர்.
    Next Story
    ×