search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா முன்னாள் கமிஷனர் ராஜீவ் குமார்
    X
    கொல்கத்தா முன்னாள் கமிஷனர் ராஜீவ் குமார்

    சாரதா ஊழல்: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை பிடிக்க சி.பி.ஐ. தனிப்படை

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. தனிப்படை அமைத்துள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை எனக்கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக முன்னர் இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது.

    அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகளை  கைது செய்த போலீசார்

    அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் கொல்கத்தா கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

    இதற்கிடையே, சிபிஐ கைது செய்வதற்கான தடையை கொல்கத்தா கோர்ட் கடந்த 13-ம் தேதி விலக்கிக் கொண்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றனர்.

    அவர் அங்கு இல்லாததால் மேற்கு வங்காளம் மாநில தலைமை செயலகத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது இருப்பிடம் தொடர்பாக கடந்த இருநாட்களாக விசாரித்தனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தும்படி மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயரதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்குள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையில், ராஜீவ் குமார் தரப்பில் கோர்ட்டில் இன்று காலை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்ற எல்லை இதுவல்ல என குறிப்பிட்ட நீதிபதி
    தள்ளுபடி செய்தனர்.

    இந்நிலையில், சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
    Next Story
    ×