search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பு
    X
    பாம்பு

    செல்போனில் பேசிக்கொண்டே படுக்கையில் அமர்ந்த பெண், பாம்புகள் கடித்து பலி

    செல்போனில் கணவனிடம் பேசிக்கொண்டே படுக்கையில் பாம்புகள் இருப்பதை கவனிக்காமல் அமர்ந்த பெண், பாம்புகள் கடித்து பலியானார்.
    கோரக்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம்  ரியனவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய் சிங் யாதவ்.  இவரது மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கீதா தனது கணவனுடன் நேற்று செல்போனில் பேசினார். போனில் பேசியபடியே சென்ற அவர் தனது படுக்கையில் அமர்ந்து உள்ளார். அப்போது படுக்கையில் இருந்த பாம்புகள் அவரை ஆவேசமாக சரமாரியாக கடித்து உள்ளன. இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக  உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிர் இழந்தார்.

    உறவினர்கள்  மற்றும் பக்கத்து வீட்டினர்  கீதாவின் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, பாம்புகள் படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்தன. கோபமடைந்த அவர்கள் பாம்புகளை அடித்து கொன்றனர்.

    இதுபற்றி கால்நடை நிபுணர்கள் கூறுகையில், பாம்புகள் மீது அந்தப் பெண் அமர்ந்தபோது பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறினர்.

    Next Story
    ×