
மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்துக்கு உட்பட்ட ஜல்கான் புறநகர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் தொகுப்பு வீடுகளை கட்டி, வீடற்ற மக்களுக்கு அளிப்பதற்காக 1990-ம் ஆண்டுவாக்கில் ’கார்குல் வீட்டு வசதி திட்டம்’ தொடங்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சிவசேனா கட்சியை சேர்ந்த சுரேஷ் ஜெயினை 2012-ம் ஆண்டு கைது செய்தனர். அப்போது அவர் மகாராஷ்டிரா மாநில அரசில் மந்திரியாக பதவி வகித்தார். சுமார் ஓராண்டு சிறைவாசத்துக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமின் பெற்ற சுரேஷ் ஜெயின் விடுதலையாகி, வழக்கை எதிர்கொண்டார்.
இதே வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முன்னாள் மந்திரி குலாப்ராவ் டியோகர் உள்பட மொத்தம் 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு துலே மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுருஷ்ட்டி நீல்காந்த், அம்மாநில முன்னாள் சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்றொரு முன்னாள் மந்திரியான குலாப்ராவ் டியோகருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 46 பேருக்கு மூன்றாண்டு முதல் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.