search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    முறைகேடு செய்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? சிதம்பரத்தின் குடும்பத்தினர் கேள்வி

    ப.சிதம்பரம் முறைகேடு செய்துள்ளார் என்பதற்கான ஆதாரம் ஏதேனும் ஒன்று உள்ளதா என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    டெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இதற்கிடையில், இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்ததையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

    டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை முதலில் 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதி மன்றம் அனுமதி அளித்தது.  அதன்படி, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் வேண்டுமே சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று வரும் 30-ம் தேதி வரை ப.சிதம்பரத்துக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது:

    உலகின் எந்த மூலையிலாவது ப.சிதம்பரம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை நிரூபிக்க ஆதாரமாக ஏதேனும் ஒரு வங்கி கணக்கு விவரம், சொத்து விவரம் அல்லது ஒரு போலி நிறுவனத்தை மத்திய அரசால் சமர்ப்பிக்க முடியுமா? உண்மை நிச்சயம் வெல்லும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    Next Story
    ×