search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்மீத் ராம் ரகீம்
    X
    குர்மீத் ராம் ரகீம்

    சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் பரோல் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்

    பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் பரோல் மனுவை பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
    சண்டிகர்:

    பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்ற சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் அரியானாவில் உள்ள சுனைரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் அவர் தோட்ட வேலைகளைச் செய்து வருகிறார்.

    இந்நிலையில், சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கிற்கு பரோல் கேட்டு அவரது மனைவி ஹர்ஜித் கவுர், பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குர்மீத் ராம் ரகீம் சிங்கின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை உடனிருந்து கவனிப்பதற்காக அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் ஹர்ஜித் கவுர் கேட்டுக்கொண்டார்.

    ஆனால், பரோல் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ராம் ரகீமின் தாயாருக்கு டாக்டர் தான் சிகிச்சை அளிக்க வேண்டும், ராம் ரகீம் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியது.

    மேலும்  ராம் ரகீமுக்கு சொந்தமான மருத்துமனையில் அவரது தாயாருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்து கவனித்துக்கொள்ள முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இதேபோல், சொந்த ஊரில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்ய இருப்பதாக கூறி ஏற்கனவே ராம் ரகீம் சிங் பரோல் கோரியிருந்தார். பின்னர் அந்த மனுவை திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×