search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம் தரை இறக்கம்
    X
    விமானம் தரை இறக்கம்

    கடைசி நிமிடத்தில் தரை இறக்க முடியாமல் போன விமானம் -இதுவா காரணம்?

    கோவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தினை கடைசி நிமிடத்தில் தரை இறக்க முடியாமல் போனது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
    பனாஜி:

    கோவாவின் டபோலிம் நகரத்தில் அமைந்துள்ளது சர்வதேச டபோலிம் விமான நிலையம். கோவாவில் உள்ள ஒரே விமான நிலையம் இதுதான். இந்த நிலையத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விமானங்களும், இந்திய இராணுவத்தின் வான்படை விமானங்களும் நிறுத்தப்படுகின்றன. எனவே, இது வான்படையினரின் வானூர்தி தளமாகவும் செயல்படுகிறது.

    இந்த விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மும்பையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்துக் கொண்டிருந்தது. தரை இறக்க ஓடுதளத்தை நெருங்கிய வேளையில், கடைசி நிமிடத்தில் விமானம் தரை இறக்கப்படவில்லை. ஏனென்றால், அங்கு பல நாய்கள் திரிந்துக் கொண்டு இருந்துள்ளன.

    ஏர் இந்தியா விமானம்

    அதிகாலை என்பதால் நாய்களின் நடமாட்டம் ஓடுதளத்தில் இருப்பதை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களால் கண்டறிய முடியவில்லை. இதனால் விமானம் கோவாவில் தரை இறக்கப்படவில்லை.

    இது குறித்து அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், 'ஐ.என்.எஸ் ஹன்சா நாய்கள், பறவைகள் ஓடுதளத்தில் இருப்பதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக அதிகாலை வேளையில் அதிக ஆட்களை பணியமர்த்தும். ஏற்கனவே, ஓடுபாதையின் அருகிலிருந்து 200 நாய்களை இடமாற்றம் செய்ய மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது' என கூறியுள்ளனர்.



    Next Story
    ×