என் மலர்

  செய்திகள்

  பிரசாந்த் - நரசிம்மலு
  X
  பிரசாந்த் - நரசிம்மலு

  டிக்-டாக் விபரீதம்: ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி வாலிபர் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானாவில் ஏரியில் குளித்தபடியே டிக்-டாக் வீடியோ எடுத்ததால், கவனக்குறைவால் ஒரு வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகருக்கு பிரசாந்த்(24) என்பவர் அவரது உறவினரான நரசிம்மலு என்பவரை சந்திக்க வந்துள்ளார். இருவரும் நகருக்கு வெளியே இருந்த ஏரியில் குளித்துள்ளனர்.

  ஏரியில் சிறிது நேரம் குளித்த பின்னர் பிரசாந்த், டிக்-டாக் செயலி மூலம் வீடியோ எடுக்க தொடங்கினார். வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, நரசிம்மலு ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். பிரசாந்த், இதை உணராமல் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார்.

  நீரில் மூழ்குதல் (மாதிரிப்படம்)

  ஒரு கட்டத்துக்கு மேல்தான் நரசிம்மலு ஆபத்தில் இருக்கிறார் என்பதை பிரசாந்த் உணர்ந்துள்ளார். அவரைக் காப்பாற்ற பிரசாந்த் போராடியும்  முடியவில்லை.

  இதையடுத்து செய்வதறியாமல் திகைத்த பிரசாந்த், ஏரிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து காப்பாற்றுவதற்குள், நீரின் ஆழத்தில் சென்று மூழ்கி நரசிம்மலு இறந்துவிட்டார்.

  நரசிம்மலுவுக்கு நீச்சல் தெரியாததுதான் இந்த சம்பத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
  Next Story
  ×