search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம் கிரிக்கெட் வீரர் ஜஹாங்கீர் அகமது வார்
    X
    இளம் கிரிக்கெட் வீரர் ஜஹாங்கீர் அகமது வார்

    கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கியதில் இளம் வீரர் உயிரிழப்பு

    ஜம்மு காஷ்மீரில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கியதில் இளம் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள படான் பகுதியைச் சேர்ந்தவர் ஜகாங்கீர் அகமது வார்(18). இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார். வீட்டில் இருப்பதை விட மைதானத்தில்தான் தன் அதிக நேரத்தை செலவழித்துள்ளார்.

    அகமது, நேற்று அரசு சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டார். அணி சார்பாக பேட்டிங் செய்ய களம் இறங்கினர் அகமது.

    அவருக்கு அதிவேகமாக பந்து வீசப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது பந்து பலமாக மோதியதால் நின்ற இடத்தில் இருந்தே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

    பந்து வீச்சு

    உடனடியாக மைதானத்தில் இருந்தவர்கள் அகமதை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அகமத்தினை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இது குறித்து மருத்துவர் கூறுகையில், ‘ஷாட் பிட்ச் பந்தினை அகமது அடிக்க முயன்றபோது மிஸ் ஆகி கழுத்தில் நேராக தாக்கியுள்ளது. உடனே சுயநினைவின்றி மயங்கி விழுந்துவிட்டார்.

    ஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து அதிவேகமாக வந்ததால் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்’ என கூறினார்.

     

     
    Next Story
    ×