என் மலர்

  செய்திகள்

  வெடி விபத்து
  X
  வெடி விபத்து

  துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து எடுத்துச் சென்ற வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிர மாநிலத்தில், ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
  அகமத்நகர்:

  மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள காரே கர்ஜுனே கிராமத்தின் அருகில் ராணுவத்தின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிதறிக் கிடக்கும் தோட்டாக்கள் மற்றும் வெடிக்காத குண்டுகளை அப்பகுதியினர் எடுத்துச் சென்று பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்வது வழக்கம்.

  அவ்வகையில் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய எல்லைக்குள் கிடந்த ஒரு வெடிகுண்டை அக்சய் (19), சந்தீப் (34) ஆகியோர் இன்று அதிகாலையில் எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டுக்கு சென்றதும், அதில் இருந்து உலோகத்தை பிரித்து விற்பதற்காக உடைத்துள்ளனர். ஆனால், அந்த குண்டு உயிர்ப்புடன் இருந்ததால் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், இருவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
  Next Story
  ×