search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுராக் தாக்குர்
    X
    அனுராக் தாக்குர்

    பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி - மக்களவையில் தீர்மானம் நிறைவேறியது

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2019 அன்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தற்கொலைப்படை பயங்கரவாதி நமது வீரர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

    இதைதொடர்ந்து, இந்தியாவுக்கு மிகவும் உகந்த நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. மேலும், பாகிஸ்தானில் உற்பத்தியான மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களின் மீது 200 சதவீதம் சுங்கவரி விதிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்தது. முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆலோசனைப்படி, இதற்கான அறிவிக்கை 16-2-2019 அன்று வெளியிடப்பட்டது.

    அருண் ஜெட்லி

    இந்நிலையில், இந்த முடிவுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைக்கோரி மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்த தீர்மானம் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×