search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி மோசடி குற்றவாளியிடம் அருண்ஜெட்லி மகள் லட்சக்கணக்கில் பெற்றார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
    X

    வங்கி மோசடி குற்றவாளியிடம் அருண்ஜெட்லி மகள் லட்சக்கணக்கில் பெற்றார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    வங்கி மோசடி குற்றவாளியிடம் அருண்ஜெட்லி மகள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #BJP #Congress

    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாக நவம்பர் 12 மற்றும் 20-ந் தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள தனியார் கல்லூரியில் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது.

    இதில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோர் பற்றி நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருவரும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மோசடி செய்தவர்கள். ரூ.35 ஆயிரம் கோடியை திருடியவர்கள்.

     


    இதில் மொகுல்சோக்ஷி மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியின் மகளின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ஜெட்லி மகள் பணம் பெற்றுள்ளார். ஊடகங்கள் மிரட்டி ஒடுக்கப்படுவதால் இதுகுறித்த செய்தியை வெளியிட தயங்குகின்றன.

    இதன் காரணமாகவே மெகுல் சோக்ஷி மீது அருண்ஜெட்லி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அவர் எளிதில் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    இதே விவகாரம் குறித்து சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி கடன் மோசடியாளர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக அருண்ஜெட்லிமகள் சோனாலி, மருமகன் ஜெயேஷ் பக்ஷி ஆகியோர் இருந்தனர். இதற்காக ரூ.24 லட்சம் கட்டணமாக பெற்றுள்ளனர்.

    நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவான பிறகு சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் பலரிடம் விசாரணை செய்தது. ஆனால் அருண்ஜெட்லியின் மகள், மருமகனிடம் மட்டும் விசாரணை நடைபெற வில்லை. இதற்கு அருண் ஜெட்லியின் தலையீடே காரணம்.

    வங்கி கடன் வழக்கில் இருந்து அவர் தனது மகளையும், மருமகளையும் காப்பாற்றினார். இதன்மூலம் தனது நிதி மந்திரி பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே அருண்ஜெட்லியை மத்திய மந்திரி பதவிவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுளார். #RahulGandhi #BJP #Congress

    Next Story
    ×