search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குறுதிகளை நிறைவேற்றாத ம.பி முதல்வர் - தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர் வீதியில் பிச்சை எடுக்கும் அவலம்
    X

    வாக்குறுதிகளை நிறைவேற்றாத ம.பி முதல்வர் - தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர் வீதியில் பிச்சை எடுக்கும் அவலம்

    மத்தியப்பிரதேச முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர் பிழைப்புக்காக வீதியில் பிச்சை எடுத்து வருகிறார்.
    போபால் :

    மத்தியப்பிரதேச மாநிலம், நரசிங்ப்பூரை சேர்ந்தவர் மன்மோகன் சிங் லோதி, மாற்றுத்திறனாளியான இவர் தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.

    தேசிய அளவில் தடகள போட்டிகளில் வெற்றி பெற்றதால் மன்மோகன் சிங் லோதிக்கு உதவித்தொகை மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு வெளியிட்டார்.

    எனினும், முதல்வர் அறிவித்தபடி  உதவித்தொகையும், வேலையும் லோதிக்கு வழங்காததால் வறுமை காரணமாக அவர் வீதியில் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மன்மோகன் சிங் லோதி கூறுகையில், ‘ நான் முதல்வரை நான்கு முறை சந்தித்து அவர் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி நினைவூட்டினேன். இருந்தாலும் அவை ஏதும் அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை. நான் வறுமையில் இருப்பதால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் குடும்பத்தை காப்பாற்றவும் போதிய பண வசதி இல்லை.



    ஏற்கெனவே முதல்வர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதபட்சத்தில் வயிற்று பிழைப்புக்காக தொடர்ந்து வீதியில் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளேன்’ என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×