search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது - பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு
    X

    உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது - பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு

    உச்ச நீதிமன்றத்திலும் மிகப் பெரிய அளவில் ஊழல் உள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.526 கோடி அளவில் பிரான்சிடம் வாங்கியது.  ஆனால், பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.1,670 கோடி அளவில் வாங்கி உள்ளது.

    இதனால், ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், இதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செய்தியர்கள்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

    உச்ச நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கையும் தொடுப்பதற்கு முன்னதாக அங்கு மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ரூ.36 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து நான் தீர்மானிக்கவில்லை. ஏனெனில், உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது.

    எனினும், ரபேல் விவகாரத்தில் அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வழிகளை தேர்வு செய்துவிட்டேன். காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை மிகவும் வீரியத்துடன் மக்களிடம் எடுத்து செல்வது பாராட்டுக்குறியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×