search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க ம.பி முதல்-மந்திரி ஒப்புதல்
    X

    முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க ம.பி முதல்-மந்திரி ஒப்புதல்

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ம.பி முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அனுமதி அளித்துள்ளார். #ShivrajSinghChouhan
    போபால் :

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து அரசு பதவிகளில் இல்லாதவர்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை உடனடியாக காலி செய்தாக வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து, உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல்-மந்திரிகளான அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் தங்களது அரசு பங்களாவை காலி செய்தனர்.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள் காட்டி மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகளான திக்விஜய் சிங், உமா பாரதி, கைலாஷ் ஜோஷி மற்றும் பாபுலால் கௌர் ஆகியோர் தாங்கள் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

    ஆனால், அவர்கள் தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க விரும்புவதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் தெரிவிக்கவே தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உமா பாரதி, கைலாஷ் ஜோஷி மற்றும் பாபுலால் கௌர் ஆகியோர் தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    திக்விஜய் சிங் அரசு பங்களாவில் வசிக்க விரும்புவதாக விருப்பம் ஏதும் தெரிவிக்காத நிலையில் அவர் தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×