search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமை சேர்ந்த எம்.எல்.ஏ தன்னை கற்பழித்ததாக பெண் போலீசில் புகார்
    X

    அசாமை சேர்ந்த எம்.எல்.ஏ தன்னை கற்பழித்ததாக பெண் போலீசில் புகார்

    அசாமை சேர்ந்த எம்.எல்.ஏ தன்னை கற்பழிப்பு செய்ததாக, பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கவுகாத்தி :

    அசாம் மாநிலம், அல்காபுர் தொகுதி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜாம் உதின் சவுத்திரியால் தான் இரண்டு முறை கற்பழிப்பழிக்கப்பட்டதாக ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்துள்ள புகார் மனுவில், ’தனது கணவர் உதவியோடு தன்னை எம்.எல்.ஏ நிஜாம் 19-ம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் கற்பழித்தார். மேலும், தன்னை அசாம் தலைநகர் கவுகாத்திக்கு கடத்தி செல்லவும் எம்.எல்.ஏ நிஜாம் முயன்றார். ஆனால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்ததால் தப்பித்து விட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாமில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ மீது கற்பழிப்பு புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது, எனக்கெதிராக தொடுக்கப்பட்ட சதித்திட்டம் இது என எம்.எல்.ஏ  நிஜாம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×