search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்கள் மீது தாக்குதல் - லக்னோ பல்கலைக்கழகம் மூடப்பட்டது
    X

    ஆசிரியர்கள் மீது தாக்குதல் - லக்னோ பல்கலைக்கழகம் மூடப்பட்டது

    உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரில் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலால் பத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் காயமடைந்தனர். #LucknowUniversityattack #teachersattacked #LucknowUniversityclosed
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரில் அமைந்துள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இடம் கிடைக்காத சில அதிருப்தியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருவதாக தெரிகிறது...

    இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்துள் இன்று சுமார் 30 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. கண்ணில் பட்ட ஆசிரியர் - ஆசிரியைகளை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் பத்துக்கும் அதிகமான ஆசிரியர்களும், பல்கலைக்கழக காவலாளிகளும் காயம் அடைந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபர்கள் தங்களை சமாஜ்வாதி கட்சி தொண்டர்களாக அடையாளம் காட்டிகொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேர்காணல் நிறுத்தப்பட்டு, பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #LucknowUniversityattack  #teachersattacked #LucknowUniversityclosed
    Next Story
    ×