search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் 10 வயது சிறுமி இருப்பதால் பாஜக ஓட்டு கேட்க வரவேண்டாம் - போஸ்டர்களால் பரபரப்பு
    X

    வீட்டில் 10 வயது சிறுமி இருப்பதால் பாஜக ஓட்டு கேட்க வரவேண்டாம் - போஸ்டர்களால் பரபரப்பு

    கேரளாவில் வீட்டில் 10 வயது சிறுமி இருப்பதால் பாஜக ஓட்டு கேட்க வரவேண்டாம் என்று வீடுகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #JusticeForAshifa

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழை அருகே செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உ.பி. பலாத்கார சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் செங்கன்னூர் தொகுதி மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய நோட்டீசை கதவின் வெளியே மாட்டிவைத்துள்ளனர்.

    ஒரே இரவில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தொங்கவிடப்பட்டுள்ள நோட்டீஸ்களில் உள்ள எழுத்துகளில் வித்தியாசங்கள் உள்ளன. அதாவது, இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி இருக்கிறாள், வாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம். கேட்டுக்கு வெளியே நில்லுங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சிறுமி படுகொலை குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, பாலியல் பலாத்காரம் செய்து 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய செய்துள்ளது. இந்த சம்பங்களில் பா.ஜனதா ஆதரவாளர்கள் தொடர்பில் இருப்பது வெட்ககேடானது. ஆனால் அது குறித்து அக்கட்சியின் தலைமை எந்த அறிக்கையும் வெளியிடாதது மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த ரஜித் ராம் தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்ட முடிவு செய்தார். பெயர் குறித்து தேர்வு செய்யும்போது காஷ்மீர் சிறுமியின் கொடூர சாவு குறித்த தகவல்கள் வெளியானது. இது அவரது மனதை புண்படுத்தியது. இனி உலங்கில் இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது. சிறுமியின் நினைவாக தனது மகளுக்கு ஆசிபா என்று பெயர் சூட்டியுள்ளார். ரஜித் ராமின் இந்த செயல் கேரளா மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

    Next Story
    ×