என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை சினிமா படமாகிறது சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை சினிமா படமாகிறது](https://img.maalaimalar.com/Articles/2017/Dec/201712160222285185_A-biopic-on-Shiv-Sena-founder-Bal-Thackeray_SECVPF.gif)
X
சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை சினிமா படமாகிறது
By
மாலை மலர்15 Dec 2017 8:52 PM GMT (Updated: 15 Dec 2017 8:52 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மராத்தி மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடத்திய சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது.
மும்பை:
மராட்டியத்தில் சிவசேனா கட்சியை தொடங்கி செல்வாக்குடன் இருந்தவர் பால்தாக்கரே. மராத்தி பேசும் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்தி பிரபலமானவர். பால்தாக்கரே 2012-ல் தனது 86-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.
இந்த படத்தை சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தயாரிக்கிறார். பால்தாக்கரேயின் சிறுவயது வாழ்க்கை, சிவசேனா கட்சியை தொடங்கியது, மராட்டியத்தில் அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் இந்த படத்தில் இடம் பெறுகின்றன. இதில் பால்தாக்கரே கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் நசுருதீன் சித்திக் நடிப்பார் என்று தெரிகிறது.
படம் குறித்து சஞ்சய் ராவத் எம்.பி கூறும்போது, “பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்றை எனது சொந்த செலவில் படமாக தயாரிக்கிறேன். நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. 21-ந்தேதி இந்த படத்தின் தொடக்க விழா நடக்கிறது. இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். பெரும்பகுதி காட்சிகளை மும்பையிலேயே படமாக்க திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)