search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் மசூதி எனக்கே சொந்தம்: முகலாய மன்னர் வாரிசு பரபரப்பு தகவல்
    X

    பாபர் மசூதி எனக்கே சொந்தம்: முகலாய மன்னர் வாரிசு பரபரப்பு தகவல்

    அயோத்தி விவகாரத்தில் திடீர் திருப்பமாக முகலாய மன்னரின் வாரிசான யாகூப் ஹபிபுதீன் பாபர் மசூதி எனக்கே சொந்தம் என கூறியுள்ளா.
    லக்னோ:

    முகலாய மன்னர்களில் ஒருவரான பகதூர் ஷா ஜப்பாரின் வாரிசான இளவரசர் யாகூப் ஹபிபுதீன், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தி சர்ச்சை தொடர்பாக கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த ரவிசங்கரின் ஆலோசனையை வரவேற்கிறேன். பெங்களூருவில் ரவிசங்கரை சந்தித்து இது குறித்து பேசினேன். இந்த விவகாரத்தில் தலையிட ஷியா வகுப்பு வாரியத்துக்கு உரிமை கிடையாது.

    பாபர் மசூதி எனக்கே சொந்தம். எனவே என்னை அதன் பொறுப்பாளராக நியமிக்க சன்னி வகுப்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உத்தர பிரதேச சிறுபான்மை நலத்துறை மந்திரி சவுத்ரி லட்சுமி நாராயணனை சந்தித்து மனு அளித்து உள்ளேன். என்னை பொறுப்பாளராக நியமிக்காவிட்டால் கோர்ட்டுக்கு சென்று என்னுடைய உரிமையை நிலை நாட்டுவேன்.

    அயோத்திக்கு இன்று (புதன்கிழமை) செல்ல உள்ளேன். அங்கு இப்பிரச்சினையில் தொடர்புடைய பிரதிநிதிகளை சந்தித்து பேச இருக்கிறேன். அயோத்தி சர்ச்சைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அயோத்தி விவகாரத்தில் திடீர் திருப்பமாக முகலாய மன்னரின் வாரிசு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×