என் மலர்

  செய்திகள்

  ஜனாதிபதி பதவியில் “கட்சி சார்பின்றி செயல்படுவேன்”: ராம்நாத்கோவிந்த் பேட்டி
  X

  ஜனாதிபதி பதவியில் “கட்சி சார்பின்றி செயல்படுவேன்”: ராம்நாத்கோவிந்த் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜனாதிபதி பதவியில் “கட்சி சார்பின்றி செயல்படுவேன்” என்று பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  புதுடெல்லி:

  பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் வேட்புமனுவை தாக்கல் செய்து முடித்ததும் பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

  ஜனாதிபதி பதவியை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு வைத்திருப்பேன். ஜனாதிபதி பதவியானது அரசியலை கடந்தது. எனவே நான் ஜனாதிபதி பதவியில் கட்சி சார்பின்றி செயல்படுவேன்.

  ஜனாதிபதி பதவிக்குரிய மாண்பைகாக்கும் வகையில் நான் என்னால் முடிந்தவரையில் செயல்படுவேன். நான் பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட போதே எந்த கட்சியையும் சாராமல் பணிபுரிந்தேன்.

  அதுபோல ஜனாதிபதி பதவியிலும் எந்த கட்சிக்கும் சாதகமாக இருக்க மாட்டேன். எனக்கு ஆதரவு அளித்துள்ள ஒவ்வொருவருக்கும் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

  Next Story
  ×