என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம்
Byமாலை மலர்19 Feb 2017 5:52 PM GMT (Updated: 19 Feb 2017 5:52 PM GMT)
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று அவர் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அன்சாரியுடன், அவரது மனைவி சல்மா அன்சாரி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி விஜய் சாம்ப்லா, 4 எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
ருவாண்டாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை சுற்றுப்பயணம் செய்யும் ஹமீது அன்சாரி, அதன்பின்னர் உகாண்டா செல்கிறார். 23-ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் குஜராத்தில் நடந்த மாநாட்டில் ருவாண்டா அதிபர் பால் கஹாமே கலந்து கொண்டார். அவரது வருகையை தொடர்ந்து துணை ஜனாதிபதி தலைமையிலான குழு ருவாண்டா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×