search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்னா பத்திரிக்கையை சஸ்பெண்ட் செய்வதில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடில்லை: தேவேந்திர பட்னாவீஸ்
    X

    சாம்னா பத்திரிக்கையை சஸ்பெண்ட் செய்வதில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடில்லை: தேவேந்திர பட்னாவீஸ்

    சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிக்கையை தேர்தல் நாட்களின் போது சஸ்பெண்ட் செய்வதில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடில்லை என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் முனிசிபல் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, சிவ சேனாவின் பத்திரிகையான சாம்னாவை 
    தேர்தல் தினத்தன்று வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் கமிஷனிடம் பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போதே சாம்னாவின் ஔரங்காபாத் பகுதி வெளியீட்டில் விளம்பரங்கள் அச்சிடப்பட்டுள்ளது என்று பாஜக வின் தலைவர் ஸ்வேதா ஷாலினி கூறியுள்ளார்.


    இது குறித்து கருத்து தெரிவித்த தாக்கரே, “இது போன்ற நிர்பந்தங்கள் அவசரக்காலதிற்கு நிகரானவை என்றும் அவர்கள் சாம்னாவை தடை சிய நினைத்தால் முதல்வர் மற்றும் பிதரமரின் வாயையும் அடைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிக்கையை தேர்தல் நாட்களின் போது சஸ்பெண்ட் செய்வதில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடில்லை என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவீஸ், “முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற பிப்ரவரி 16-ம் தேதி சாம்னாவில் வெளியான செய்தி ஒன்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. அந்த செய்தி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாக கருதுகிறோம். அதனால் மாநில தேர்தல் ஆணையத்திடம் இது போன்ற செய்திகளை வெளியிட அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.
    Next Story
    ×