என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சேலம், வேலூர் தபால் அலுவலங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி: அடுத்த மாதம் அறிமுகம்
Byமாலை மலர்19 Feb 2017 8:11 AM GMT (Updated: 19 Feb 2017 8:11 AM GMT)
மக்களின் வசதிக்காக தபால் அலுவலங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க அலுவலகங்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய பெருநகரங்களில் இயங்கி வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முக்கிய பெருநகரங்களில் உள்ள இந்த அலுவலகங்களில் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால் பாஸ்போர்ட்களை பெற சில இடங்களில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், கடைக்கோடி பகுதிகளில் வாழும் மக்கள் பெருநகரங்களை தேடி வரும் நிலையும் இருந்து வருகிறது.
இந்த சிரமத்தை குறைக்கவும் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் தீர்மானித்த மத்திய அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது.
இதனையடுத்து, முதல்கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகம், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் வரும் மார்ச் மாதத்தில் இருந்து பாஸ்போர் சேவை மையங்கள் உருவாக்க்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் வேலூர் தலைமை தபால் நிலையங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெல்காம், தவங்கரே, ஹஸ்ஸன், குல்பர்கா, மைசூர் தலைமை தபால் நிலையங்களிலும் இதர மாநிலங்களிலும் சில முக்கிய தபால் நிலையங்களிலும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்கு முன்னதாக பாஸ்போட் வழங்கும் சேவை மையங்கள் செயல்பட தொடங்கும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
×