search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்ற தாயை கொன்று வீட்டில் புதைத்த மகள் கைது
    X

    பெற்ற தாயை கொன்று வீட்டில் புதைத்த மகள் கைது

    நிலத் தகராறு காரணமாக பெற்ற தாயை கொன்று வீட்டில் புதைத்த மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிம்லா:

    பில்சாபூர் மாவட்டத்தில் பெண்மனி ஒருவர் தனது தாயை கொன்று வீட்டினுள் புதைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.  

    கமல்ஜித் என்ற பெயர் கொண்ட விதவை பெண்மனி தனது தாய் ஜாஷ் கௌருடன் நிலத் தகராறு காரணமாக அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றியதை தொடர்ந்து தாயை மகளே கொலை செய்துள்ளார். தாயை தானே கொலை செய்து வீட்டில் புதைத்த கமல்ஜித் தனது தாய் காணாமல் போனதாக புரளியை கிளப்பிவிட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

    கமல்ஜித் கணவர் இறந்து விட்டதால் அவர் தனது தாயுடன் தங்கி வந்தார். இந்நிலையில் கமல்ஜித் தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் கமல்ஜித் தன் தாயை கொன்றது தெரியவந்துள்ளது.

    பெற்ற மகளே தனது தாயை கொன்று வீட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×