என் மலர்

  செய்திகள்

  உ.பி: லாரி மீது பைக் மோதி இருவர் பரிதாப பலி
  X

  உ.பி: லாரி மீது பைக் மோதி இருவர் பரிதாப பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேச மாநிலத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை படுகாயத்துடன் உயிர் தப்பியது.
  லக்னோ:

  உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள டெல்லி- டோராடூன் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று கம்ஹெடா கிராமத்தைச் சேர்ந்த துஷ்யந்த் (20), அவரது அத்தை மனோஜ் தேவி (35) தேவியின் குழந்தை ஆகியோர் பைக்கில் பானத் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது, பைக் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது திடீரென மோதியது. மோதிய வேகத்தில் பைக் தூக்கி வீசப்பட்டதால், பைக்கில் இருந்த இருவரும் பரிதாபமாக பலியாயினர். படுகாயத்துடன் குழந்தை உயிர் தப்பியது.

  இவ்விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×