search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி: உ.பி.யில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
    X

    12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி: உ.பி.யில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா லக்னோவில் இன்று வெளியிட்டார்.
    லக்னோ:

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  மத்தியில் ஆளும் பா.ஜ.க. உத்தரப்பிரதேசத்தில் உள்ள  403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை ”லோக் கல்யான் சங்கல்ப் பத்ரா” (மக்கள் நல்வாழ்வுக்கான உறுதிமொழி) என்ற பெயரில் பா.ஜ.க தேசியத்தலைவர் அமித் ஷா , லக்னோவில் இன்று வெளியிட்டார்.

    அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், ஒட்டு மொத்த மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு 9 பிரிவாக தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வின் முதல் கட்ட தேர்தல் அறிக்கையில், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தில் சலுகை, மாநிலத்தின் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் தேர்வு ரத்து ஆகிய அதிரடி அறிவிப்புகள் உள்ளன.

    தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, “உத்தரப்பிரதேசத்தை தவிர, பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. உ.பி. முன்னேறவில்லை. உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியது. ஆனால் மாநிலத்தில் எதுவும் நடக்க வில்லை” என குற்றம் சாட்டினார்.
    Next Story
    ×