என் மலர்

  செய்திகள்

  சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது: அரசு அளிக்கும் குருதட்சணையா? - உத்தவ் தாக்கரே ஆவேசம்
  X

  சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது: அரசு அளிக்கும் குருதட்சணையா? - உத்தவ் தாக்கரே ஆவேசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
  மும்பை:

  தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

  இந்திய அரசின் மிக உயரிய பத்ம விருதுகளுக்கு தேர்வான பல்துறை பிரபலங்களின் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.

  நான் அரசியல் வாழ்வில் நுழைந்தபோது எனக்கு சரத் பவார் உதவியாக இருந்தார் என பிரதமர் நரேந்திர மோடி முன்னர் குறிப்பிட்டுருந்தார்.

  இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பத்ம விபூஷன் விருது அளிப்பதை மத்திய அரசு அளிக்கும் குருதட்சணையாக எடுத்து கொள்ளலாமா? என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

  குர்கான் நகரில் சிவசேனா கட்சி தொண்டர்கள் இடையே நேற்று பேசிய உத்தவ் தாக்கரே, தற்போது, விருதுகள் வடிவிலும் குருதட்சணை செலுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

  இதற்கிடையில், பா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது என்றும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×