என் மலர்

  செய்திகள்

  டெல்லியில் இளம் பெண்களை குறி வைத்து முத்தமிட்ட வாலிபர்
  X

  டெல்லியில் இளம் பெண்களை குறி வைத்து முத்தமிட்ட வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் இளம்பெண்களை குறி வைத்து முத்தமிட்டு தப்பியோடும் வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ‘யூ டியூப்’ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  புதுடெல்லி:

  பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கும் இந்நிலையில், டெல்லியில், வாலிபர் ஒருவர் சாலையில் செல்லும் பெண்களிடம் முத்தமிட்டு, தப்பி ஓடி விடுகிறார். இதனை அவரது நண்பர்கள் மூலம் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

  இதுபற்றி டெல்லி போலீசாரின் கவனத்துக்கு வந்ததும் அவர்கள் இதுகுறித்த விசாரணையை தொடங்கினார்கள். இந்த வீடியோ காட்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால் அந்த வாலிபர் மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.  அந்த வாலிபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

  இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,

  முதல்கட்டமாக தொழில்நுட்பரீதியான விசாரணையை தொடங்கி உள்ளோம். இந்த குறும்புத்தனமான வீடியோவில் வரும் பெண்கள் யாராவது புகார் செய்ய வருவார்களா? என்றும் எதிர்பார்த்து இருக்கிறோம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×